Tuesday, 31 December 2013

           என் உடன் பிறவா தம்பி

“ஏழாயிரம் எப்படிப்பா போதும்!”
“எவ்வளவு  தான்டா வேனும்?”
“அப்பா பத்தாயிரம் வேனும்பா, என் பிரண்டு விவனேஷ் போன் பதினைந்தாயிரம்பா”
“ஆமாடா இதுல மட்டும் கம்பேர் பணணு, அவன் என்ன உன்ன மாதிரி இரண்டு அரியரா வச்சுருக்கான் !”
“அப்.................பா  , சரியா கேட்கமாட்டிங்குது, கொஞ்சம் சத்தமா பேசுங்க”
“நல்லதுடா , நான் போன்ன வச்சுறேன்,அக்கவுன்ட்ல பணத்த போட்டுறேன், சனிக்கிழமை வீட்டுக்கு வரப்ப வாங்கிட்டு வந்துறு”
“சரிப்பா நான் படிக்க போறேன்”
450 ஆண்டுகளுக்கு முன்பு, கற்கால மனிதன் வாழ்வதற்கு மூன்று தேவைகள் உணவு, உடை ,உறைவிடம்
இன்றோ கல்லூரி பயிலும் மாணவன் பந்தா செய்வதற்கும், அவன் தினந்தொறும் கல்லூரி செல்வதற்கும் மூன்று தேவைகள்
1.   முகநூலில் அக்கவுண்ட்
2.   லோ கிப் ஜீன்ஸ்
3.   தொடுதிரை கைப்பேசிகள்
முதல் இரண்டு தேவைகள் தானாக கிடைத்துவிட மூன்றாவது தேவை பல கட்ட பேச்சுவார்தைகள் அறவழி போராட்டங்களுக்கு பிறகு எனக்கு கிடைக்க போகிறது என்கிற மகிழ்ச்சியில், கண்முன்னே இருந்த புத்தகத்தின் எழுத்துகள் யாவும் கத்தக்களி ஆடிக்கொண்டு இருந்தன.
நம் நாட்டின் மக்கள் தொகையை போல, என் அரியர் எண்ணிகையும் கட்டுக்கடங்காமல் போய்விடக் கூடாதென்று போற்கால நடவடிக்கையாக  சரமாரியாக பக்கங்களை திருப்ப துவங்கினேன். முதல் பக்க துவக்கத்தில் சமவெயில் இருந்த நான்,எழாவது பக்கம் முடியும் தருவாயில் மலை குன்றின் உச்சத்திற்க்கே வந்து விட்டேன். இனி ஒரு பக்கம் படிப்பதும் ,ஏன் ஒரு வார்த்தை படிப்பதும் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் ஒன்று தான், என்கிற எண்ண ஓட்டம் என் இமைகளை மூடச் செய்தது. எப்பவும் வெறுமையாய் தெரியும் இயற்கை புத்தகம் கண் முன்னே இருக்கும் போது மட்டும் இந்தியானா ன்ஸ் படத்தில் வரும் புதையலை போல் காட்சியளிக்கும். பதட்டமும் பயமும் என் இமைகளை திறந்து பார்வைக்கு உயிர் கொடுக்க , புத்துணர்வு பெறுவதற்காக , என் அறையை விட்டு பால்கேனிக்கு சென்றேன். நட்சத்திரங்கள் இல்லா நீல வானமும், நானிலத்தை நனைக்க காத்து இருக்கும் கருமேகங்களும் , பல்லாயிர அடிகளை தாண்டி எனக்கு தெளிவாக தெரிந்தது ,ஆனால் சில அடி தூரத்தில் இருந்த புத்தகம் மட்டும் புரியா புதிராகவே இருந்தது.அது தேர்வு காலம் என்பதால், கல்லூரி விடுதிக்கு வண்ணம் பூசும் பணி நடந்து கொண்டு இருந்தது . சுண்ணாம்பு கலவைகளும், தகர டப்பாக்களும் இடையே சிலர் மும்முரமாக  வண்ணம் பூசிக் கொண்டு இருந்தார்கள் . அவர்களுக்கு மத்தியில் வெள்ளை நிற கால் சட்டையும் சாம்பல் நிற அரைகால் டவுசரும்  அணிந்து கொண்டு ஒரு சிறுவன் அங்கும் இங்கும் துறுதுறுவென்று வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் கால் சட்டை வெள்ளை நிறம் தான் ,ஆனால் வியர்வையும், சுண்ணாம்பு கலவையும் சேர்ந்து அவன் கால்சட்டையை வானவில்லை காட்டிலும் வண்ணமயமாய் மாற்றி இருந்தது. என் யூகம் சரியாக இருந்தால் அவன் வயது 10 அல்லது 12 இருக்கும் .எங்கோ எதிலோ படித்த கவிதை நினைவிற்கு வந்தது.
“அன்னை மடியில் உறங்க வேண்டியவன்
அழுக்குகளுக்கு இடையே உறங்குகிறான்
என் முதுகிலோ புத்தக சுமை
அவன் முதுகிலோ குடும்ப சுமை
அறுசுவை உணவை நான் நாடுகிறேன்
அன்றாத உணவிற்காக அவன் வாடுகிறான்
இவனும் ராஜா தான்
எச்சில் மாளிகைக்கும்
கறை படிந்த கோபுரத்துக்கும்”
            அதான் அரசே 26 இலசங்களை தருதே அப்புறம் என்ன ஸ்கூலுக்கு போக வேண்டியது தானே, இப்படி ஊர் சுத்துறவங்க தான் பின்னாடி ரவுடியாகவும் , திவிரவாதியாகவும் வந்து நம்ம  உயிரை வாங்குறாங்க , கண்டிப்பா அவன பார்த்து நாலு வார்த்தை நறுக்குனு கேட்கனும் என்று இறுமாப்புடன் காத்து கொண்டு இருந்தேன். வேலை நிமித்தமாய் நான் நின்று கொண்டு இருந்த பால்கேனுக்கு அவன் வந்தான்.
'' டேய் தம்பி , இங்க வா ''
'' டேய் தம்பி இல்ல என் பெயர் நவீன் ", என்று சொல்லிக்கொண்டே என் அருகில் வந்தான்.
" ஏண்டா பள்ளிக்கூடத்தில ,யார் மண்டையாவது உடைச்சுடியா , இல்ல
பெயில்லாயிட்டியா , ஸ்கூலுக்கு போகாம இங்க சுத்திக்கிட்டு இருக்க ", என்றேன் .
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லனே, "
'' அப்புறம் என்னடா, அதான் அரசாங்கமே 26 இலவசங்களை தருதுல இதுக்கு மேல அவங்க என்ன தான்டா பண்ண முடியும் , நாட்டில பாதி பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே கல்வியறிவு இல்லாதனால தான் வருது''
கேள்வி கேட்ட மறுநொடியே காட்டாறு வெள்ளம் போல அவன் கண்ணகளில் இருந்து கண்ணிர் பாயத் தொடங்கியது. இவன் முகத்தில் இருந்த வியர்வை துளிகள் பாதி கண்ணிர் விழுங்கி விட்டன, மீதி இருந்தவற்றை துடைத்து விட்டு கனமான குரலொடு காயப்பட்ட நெஞ்சத்தொடு என்னை பார்த்து கேட்டான் ,"எனக்கு மட்டும் சோறு போட்டால் போதுமா ,என் அப்பா சின்ன வயசுலேயே தவறிட்டாரு  , எனக்கு இரண்டு தங்கச்சி ,அவங்க சாப்பிட வேண்டாமா , நீங்க கேட்ட கேள்வி எல்லாமே எனக்கும் தோனிருக்கு ,ஆனா பதில் மட்டும் தான் தெரியல,''
கல்லூரி நேரத்தில் சுவர் ஏறி குதித்து மங்காத்தா திரைப்படத்தின் சென்ற போதும் ,படிக்கின்றேன் என்கின்ற போர்வையில் ,பல மணி நேரம் மாடி அறையில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்த போதும் வராத குற்ற உணர்வு என் மனதை மானசிகமாய் தாக்கியது . ஆக, இவனை போல 5,6 பேருடைய வாழ்க்கையை நான் ஒருவனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
''உனக்கு இங்க எவ்வளவு டா சம்பளம் ''
''ஒரு வாரத்திற்கு 600 ரூபாய்னே ''
''சரிடா அத நான் தர்றேன் ,நீ ஸ்கூலுக்கு போறியா ''
''அண்ணா பணம் கிடைச்சுட்டால் கண்டிப்பா போவேனே ''
சரி நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக்கோ ,அதக்கு அடுத்த நாளில் இருந்து ஸ்கூலுக்கு தான் போகனும் சரியா !''
''சரினே''
நாளைக்கு என்னால் அவனுக்கு பணம் தர முடியும் , ஆனா அதற்கு அடுத்த வாரங்கள் என்ன செய்வது என்ற எண்ணம் ,சிறிது நேரத்திற்கு பிறகு என்னிடம் பிறந்தது . அதான் அக்கவுண்ட்டுல பத்தாயிரம் இருக்குமுல அப்பறம் என்ன !
இப்போது புத்தகத்தை பார்த்தேன் புரிந்தது, புத்தகத்தில் உள்ள பாடமும் வாழ்க்கை கற்று தந்த பாடமும்.